/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 17, 2024 09:02 PM
சூலூர்:கோவை மாவட்டம் சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன்புதுாரில் வாடகை வீட்டில், டேங்கர் லாரி டிரைவர்களான, தேனி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இருவரும் தங்கியிருந்தனர். 15ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு, ஒரு கேனில் இருந்து மற்றொரு கேனுக்கு பெட்ரோலை ஊற்றும் போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
தீ மற்றும் கரும்புகையால் மூச்சு திணறி அழகர் ராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தினேஷ்குமார், வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அதில், சிகிச்சை பலனின்றி, ஆண்டிப்பட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்த பரமன் மகன் வீரமணி, 21 நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனால், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.