/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
ADDED : மார் 11, 2025 09:41 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் பாரிஸ்பேகம் வரவேற்றார். திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமை வகித்து பேசினார்.
பள்ளியின் ஆண்டறிக்கையை, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சண்முகசுந்தரம் வாசித்தார். நடனம், வில்லுப்பாட்டு, நகைச்சுவை, திருக்குறள் ஒப்புவித்தல் என, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், மாணவர்கள் திறமை காண்பித்து அசத்தினர். முன்னாள் மாணவர்கள் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பருவத்தேர்வில் முதல் மதிப்பெண், வருகைப்பதிவு 100 சதவீத மாணவர்கள், 'ஆன்லைன்' கல்வி ரேடியோவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியர் கனகமணி நன்றி கூறினார்.