Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன கேள்வி எழுப்பும் அண்ணாமலை

தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன கேள்வி எழுப்பும் அண்ணாமலை

தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன கேள்வி எழுப்பும் அண்ணாமலை

தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன கேள்வி எழுப்பும் அண்ணாமலை

ADDED : ஜூன் 28, 2024 03:00 AM


Google News
கோவை:பார்லிமென்ட்டில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் எனக் கூறி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழக ஆதினங்களை சமாஜ்வாதி எம்.பி., அவமானப்படுத்தியுள்ளார். இதுகுறித்து 'இண்டியா' கூட்டணியில் உள்ள தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன, என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சமாஜ்வாடி எம்.பி., சவுத்ரி, 'அரசியலமைப்புச் சட்டம் தான் ஜனநாயகத்தின் அடையாளம்.

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக இருந்தபோது, பார்லிமென்ட்டில் செங்கோல் நிறுவப்பட்டது. செங்கோல் என்பது ராஜதண்டம்.

'மன்னராட்சி முடிவுற்று நாடு விடுதலை பெற்றுள்ள நிலையில், நாடு அரசியலமைப்புச் சட்டத்தால் ஆளப்பட வேண்டுமா, ராஜ தண்டத்தால் ஆளப்பட வேண்டுமா; பார்லிமென்ட்டில் இருந்து செங்கோலை நீக்கி, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:

தேர்தல் முடிந்துவிட்டது. 'இண்டியா' கூட்டணி, நம் நாட்டின் கலாசாரம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு எதிரான கோஷங்களை மீண்டும் எழுப்பத் தொடங்கியிருக்கிறது.

செங்கோல் குறித்த இக்கருத்து ஒட்டுமொத்த 'இண்டியா' கூட்டணியின் நிலைப்பாடா; தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகிறோம்.

செங்கோல், நீதியின் அடையாளம் என்பதை அந்த சமாஜ்வாதி எம்.பி.,க்கு தெரிவிக்க விரும்புகிறோம். நேருவால் புறக்கணிக்கப்பட்ட அதை மீட்டு, உரிய இடத்தில் பிரதமர் நிறுவியுள்ளார்.

தமிழக ஆதீனங்களின் முன்னிலையில், அவர்களின் ஆசியோடு செங்கோல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி எம்.பி.,யின் கருத்து, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழக ஆதீனங்களை அவமதிப்பதாக உள்ளது.

ஆப்பிரிக்கர்களையும் தென்னிந்தியர்களையும் ஒப்பிட்டுப் பேசிய சாம் பிட்ரோடாவுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சமாஜ்வாதி எம்.பி.,யின் இக்கருத்து ஆச்சரியம் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us