/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு
காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு
காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு
காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு
ADDED : ஜூலை 18, 2024 12:10 AM
கோவை : கோவையில் காரீப் பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று ,தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
கோவை மாவட்டத்திலுள்ள விவசாயிகள், காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றைக்கொண்டு, இ--சேவை மையம் வாயிலாக பயிர்காப்பீடு செய்யலாம். இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும், பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
இது குறித்த சந்தேகங்களுக்கு, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.