/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
அமாவாசை, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆற்றங்கரைகளில் மக்கள் கூட்டம்
ஆடி அமாவாசையையொட்டி அமராவதி மற்றும் திருமூர்த்திமலை நீர்நிலைகளின் கரைகளில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், ஆடி அமாவாசைக்காக கோவில்களில் நாள்முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், கொழுமம் அமராவதி ஆற்றங்கரையிலும், திருமூர்த்திமலை பாலாற்றின் கரையிலும், முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர். இதனால், ஆற்றங்கரைகளிலும், கோவில்களிலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
ஆடிப்பெருக்கு பூஜை
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முளைப்பாரி வழிபாடு
பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமணமண்டபம் அருகே, டி. கோட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள், திரு மாங்கல்ய சுபிட்ஷம் வேண்டி, முளைப்பாரி எடுத்தனர்.