/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரதான குழாய் சீரமைப்பு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு; 'தினமலர்' செய்தி எதிரொலி பிரதான குழாய் சீரமைப்பு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு; 'தினமலர்' செய்தி எதிரொலி
பிரதான குழாய் சீரமைப்பு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு; 'தினமலர்' செய்தி எதிரொலி
பிரதான குழாய் சீரமைப்பு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு; 'தினமலர்' செய்தி எதிரொலி
பிரதான குழாய் சீரமைப்பு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு; 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : மார் 13, 2025 11:29 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில், பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் குடிநீர் தேவை, ஆழியாறு அணையின் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களுக்கான பிரதான குழாய், வஞ்சியாபுரம் பிரிவு, தென்குமாரபாளையம் வழியாக கோமங்கலம்புதுார், கெடிமேடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில் ஏற்பட்ட குழாய் உடைப்பால், அதிகப்படியான குடிநீர் வீணாக வழிந்தோடியது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, உதவி நிர்வாக பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சிவசுப்ரமணியம் அடங்கிய குழுவினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, குழாய் உடைப்பை விரைந்த சரி செய்ய பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கிராமங்களுக்கு செல்லும் பிரதான குழாய் என்பதால், தண்ணீர் விநியோகத்தை திடீரென நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாற்று குழாய் வாயிலாக தண்ணீர் வினியோகித்தை மாற்றியமைத்து, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. விரைந்து, பணிகள் முடிக்கப்படும்,' என்றனர்.