/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அகில இந்திய கூடைப்பந்துஅனல் பறக்கும் போட்டிகள் அகில இந்திய கூடைப்பந்துஅனல் பறக்கும் போட்டிகள்
அகில இந்திய கூடைப்பந்துஅனல் பறக்கும் போட்டிகள்
அகில இந்திய கூடைப்பந்துஅனல் பறக்கும் போட்டிகள்
அகில இந்திய கூடைப்பந்துஅனல் பறக்கும் போட்டிகள்
ADDED : ஜூன் 07, 2024 01:09 AM

கோவை;அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வீரர்கள் அனல் பறக்க விளையாடினர்.
கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் ஆண்களுக்கான 57வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான 21வது சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் கோப்பை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் நேற்று துவங்கி வரும், 9ம் தேதி வரை நடக்கிறது.
முதல் சுற்று முடிவுகள்: ஆண்கள் பிரிவில், வருமான வரி அணி 88 -75 என்ற புள்ளிக்கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியையும், கேரள மாநில மின்சார வாரிய அணி 64 - 55 என்ற புள்ளிக்கணக்கில் மத்திய செயலக அணியையும், பாங்க் ஆப் பரோடா அணி 83 - 53 என்ற புள்ளிக்ணக்கில் இந்தியன் வங்கி அணியையும் வென்றது.
இரண்டாம் லீக் போட்டியில் பாங்க் ஆப் பரோடா அணி 80 - 70 என்ற புள்ளிக்கணக்கில் லயோலா அணியை வீழ்த்தியது.
பெண்கள் பிரிவில், கிழக்கு ரயில்வே அணி 81 - 71 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ரைசிங் ஸ்டார் அணியையும், தென் மத்திய ரயில்வே அணி 80 - 45 என்ற புள்ளிக்கணக்கில் மேற்கு ரயில்வே அணியையும் வீழ்த்தின. இரண்டாம் லீக் போட்டியில் தென் மத்திய ரயில்வே அணி 107 - 57 என்ற புள்ளிகணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது.