/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மண்ணில் காரம் குறைந்து விட்டது! ஈஷாவின் 'மண் காப்போம்' ஒருங்கிணைப்பாளர் தகவல் மண்ணில் காரம் குறைந்து விட்டது! ஈஷாவின் 'மண் காப்போம்' ஒருங்கிணைப்பாளர் தகவல்
மண்ணில் காரம் குறைந்து விட்டது! ஈஷாவின் 'மண் காப்போம்' ஒருங்கிணைப்பாளர் தகவல்
மண்ணில் காரம் குறைந்து விட்டது! ஈஷாவின் 'மண் காப்போம்' ஒருங்கிணைப்பாளர் தகவல்
மண்ணில் காரம் குறைந்து விட்டது! ஈஷாவின் 'மண் காப்போம்' ஒருங்கிணைப்பாளர் தகவல்
ADDED : ஜூன் 09, 2024 12:25 AM

கோவை;''மண்ணில் வளம் குறைந்து விட்டது; ஆனால், நிச்சயம் மாற்றம் கொண்டு வர முடியும்,'' என்கிறார், ஈஷா மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ராசா.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
ஒரு விவசாய நிலத்தை உழவு செய்யும் பட்சத்தில், அதை அப்படியே விட்டு விடக்கூடாது. காய்ந்த இலை, தழைகளை கொண்டோ, பசுமை மூடாக்கு முறையிலோ, மண்ணை மூடி வைக்க வேண்டும். இதுதான் மண்ணுக்கு சிறந்தது.
வெயில், நேரடியாக மண்ணை தொடாமல், மூடாக்கு முறையை தான் தொட வேண்டும். அப்போது தான் நுண்ணுயிரிகள் வளமாக வாழும். சிறு உயிரினங்கள் இல்லை என்றால், மண்ணில் வளம் இருக்காது.
இன்று, மண் வாசனை எப்படி இருக்கும் என்று பலருக்கு தெரியாத நிலை உள்ளது. காரணம், மண்ணில் வளம் இல்லை.
எப்படி நம் உடலுக்கு என்ன தேவை என்று நாம் அறிந்து வைத்திருக்கிறோமோ, அதே போல், நம் உணவு தேவையை நிறைவேற்றும் மண்ணுக்கும், என்ன தேவை என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதற்கு ஒரு வழி தான், கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனைக் கூடம். மண் காப்போம் இயக்கத்தின் முக்கிய படியாக இதை பார்க்கிறோம்.
மண்ணை எப்படி பாதுகாக்க வேண்டும்; அதில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன; என்னென்ன சத்துக்கள் வேண்டும் என்று கண்டறிந்து, விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் நடவடிக்கை இது.
முதற்கட்டமாக, தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களிலும், கர்நாடகாவில் கூர்க், மைசூர், தும்கூர் ஆகிய மாவட்டங்களிலும், ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் செயல்படும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்த, தோராயமாக 10 ஆயிரம் விவசாய உறுப்பினர்களுக்கு, மண் பரிசோதனை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மண்ணின் அமில, காரத்தன்மை, அங்கக கரிமம், பேரூட்ட அளவு, நுண்ணுாட்ட அளவு ஆகியவற்றை கண்டறிந்து, அதை மேம்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு அறிவுறுத்துவோம்.
சூழலுக்கு ஏற்றவாறு, மண் வளம் அதிகரிக்க அறிவுரை மற்றும் இடுபொருட்கள் வழங்கி, விற்பனைக்கு தேவையான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இதன் வாயிலாக மண்ணில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.