/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அ,ஆ... தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு அ,ஆ... தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு
அ,ஆ... தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு
அ,ஆ... தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு
அ,ஆ... தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு
ADDED : ஜூன் 02, 2024 11:47 PM
பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களை, கணக்கெடுக்கும் பணியில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேலானவர்களைக் கணக்கெடுக்கும் பணி, மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில், இந்த கணக்கெடுக்கும் பணி மே 2ம் தேதி துவங்கப்பட்டது. மே 24ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மழை உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில பகுதிகளில் தாமதமானது. கோவை மாவட்டத்தை, 100 சதவீத எழுத்தறிவுள்ள மாவட்டமாக்கும் வகையில், இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கணக்கெடுப்புப் பணியில், இதுவரை, 11 ஆயிரத்து, 804 எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட, 927 தன்னார்வலர்கள் வாயிலாக கல்வி பயிற்றுவிக்கப்படவுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.