Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிராமந்தோறும் விவசாய அதிகாரி நியமிக்கணும்: அரசிடம் எதிர்பார்ப்பு

கிராமந்தோறும் விவசாய அதிகாரி நியமிக்கணும்: அரசிடம் எதிர்பார்ப்பு

கிராமந்தோறும் விவசாய அதிகாரி நியமிக்கணும்: அரசிடம் எதிர்பார்ப்பு

கிராமந்தோறும் விவசாய அதிகாரி நியமிக்கணும்: அரசிடம் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 25, 2024 01:54 AM


Google News
- நமது நிருபர் -

விவசாய திட்டங்களை தமிழில் விளக்கி, அமல்படுத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விவசாய அதிகாரியை நியமிக்க வேண்டும் என, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. மத்திய அரசின் பி.எம்.,கிசான், பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (பி.கே.வி.ஒய்.,) மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

ஆனால், அரசு திட்டங்கள் அனைத்தும் களத்தில் உள்ள விவசாயிகளுக்கு,100 சதவீதம் சென்றடைவதில்லை. அரசுக்கும் விவசாயிகளுக்கும் மத்தியில் உள்ள இடைவெளியே இதற்கு காரணமாக இருக்கிறது.

பெரும்பாலும் அரசாணைகள், திட்டங்கள் அனைத்தும், ஆங்கில மொழியில் வெளியிடப்படுவதால் அவற்றை படித்து புரிந்து கொள்வதில், சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சில விவசாயிகள் இவற்றை, 'கூகுள் டிரான்ஸ்லேட்டர்' பயன்படுத்தி தமிழாக்கம் செய்தாலும், அது புரியும்படியாக இல்லை என்கின்றனர்.

இதனால், அரசு திட்டங்கள் மற்றும் அரசாணைகளை 'உழவன்' செயலியில் தமிழாக்கம் செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு திட்டங்களை பற்றி, விவசாயிகளுக்கு விளக்க மற்றும் விவசாயிகளின் பிரச்னை, கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கும் வகையில், கிராமங்கள் தோறும் ஒரு விவசாய அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து, கோவை அத்திக்கடவு - கவுசிகா நதி மேம்பாட்டு சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் கூறியதாவது:

மத்திய அரசின் பல திட்டங்கள், எங்களை வந்து சேர சில ஆண்டுகள் ஆகி விடுகின்றன. அத்திட்டங்கள் குறித்து சந்தேகங்களை கேட்க, அவர்கள் கொடுத்துள்ள 'டோல் பிரீ' எண்ணிற்கு அழைத்தால், அதில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் பேசுகின்றனர். இதனால் சிரமம் ஏற்படுகிறது.

2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டத்தை பற்றி, இன்னும் பல விவசாயிகளுக்கு தெரியாத நிலையுள்ளது. தற்போது மண்டல அளவில் அதிகாரிகள் உள்ளனர்.

அவர்கள் பல கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால், வி.ஏ.ஓ., போல் ஒவ்வொரு கிராமங்களிலும், விவசாய அலுவலர்கள் இருந்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us