/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராகி சாகுபடி தொழில் நுட்பங்கள் வேளாண் துறை அறிவுரை ராகி சாகுபடி தொழில் நுட்பங்கள் வேளாண் துறை அறிவுரை
ராகி சாகுபடி தொழில் நுட்பங்கள் வேளாண் துறை அறிவுரை
ராகி சாகுபடி தொழில் நுட்பங்கள் வேளாண் துறை அறிவுரை
ராகி சாகுபடி தொழில் நுட்பங்கள் வேளாண் துறை அறிவுரை
ADDED : ஜூன் 03, 2024 11:13 PM
பெ.நா.பாளையம்:மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகள் ராகி பயிரிட வேண்டும் என, வேளாண் துறை அறிவுரை வழங்கி உள்ளது.
ராகி இறவையாக தை பட்டத்திலும், மானாவாரியாக ஆடிப்பட்டத்திலும் பயிரிடலாம். ராகி பயிரை பச்சபயிறு, உளுந்து, கொள்ளு, துவரை, மொச்சை, கடலை போன்ற ஏதேனும் ஒரு பயறு வகை பயிருடன் பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதால், நிலையான அதிக விளைச்சலை பெறலாம்.
அத்துடன் தழைச்சத்து தரக்கூடிய உரத்தேவையும் குறைகின்றது. மண்வளத்தை பாதுகாக்கவும், அதிக விளைச்சலை பெறவும் வேண்டுமெனில், ராகி, பயறு வகை பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ராகியுடன் துவரை, மொச்சை,பச்சை பயறு, உளுந்து போன்ற ஏதாவது ஒரு பயறு வகையை, 8.2 என்ற விகிதத்தில் பயிரிடும் போது, அதிக விளைச்சல் கிடைக்கின்றது. உர தேவை குறைகின்றது.
முந்தைய பயிர் அறுவடைக்குப் பின், நிலத்தை நன்கு உழவு செய்வதால், மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம். சித்திரை, வைகாசி மாதங்களில் இரட்டை கலப்பை அல்லது சுழல் கலப்பை அல்லது மர கலப்பை கொண்டு இரண்டு முறை, நன்கு ஆழமாக உழ வேண்டும்.
விதைப்பதற்கு முன்பு, மறுபடியும் ஒருமுறை உழுது நிலத்தை சமன்படுத்த வேண்டும். அப்போதுதான், விதைகள் நன்கு முளைத்து வரும். மேலும், இரண்டு அல்லது மூன்று முறை இடை உழவு செய்வதால் களைகள் கட்டுப்படும் என, வேளாண் துறையினர் கூறினர்.