/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க ஒப்பந்தம் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க ஒப்பந்தம்
மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க ஒப்பந்தம்
மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க ஒப்பந்தம்
மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க ஒப்பந்தம்
ADDED : ஜூன் 27, 2024 10:57 PM

கோவை : ரத்தினம் கல்விக் குழுமம் சார்பில், மாணவர்களின் தனித்திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில், கேட் பிளஸ் டி எனும் முன்னணி மென்பொருள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக ரத்தினம் கல்விக்குழும ஆசிரியர்கள், மாணவர்கள் கேட் பிளஸ் டி நிறுவனத்தில் பயிற்சி பெற முடியும். ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புதிய யோசனைகளுக்காக காப்புரிமை போன்றவற்றை இணைந்து மேற்கொள்ள முடியும்.
ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் பேசுகையில், ''வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வதுடன், பல்துறை அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து, கேட் பிளஸ் டி நிறுவன இண்டர்ன்சிப்பிற்கு தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணைகளை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்டினா ஸ்வார்ஷ் வழங்கினார். கேட் பிளஸ் டி நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மகேஷ் ராஜன், ரத்தினம் கல்விக் குழுமத்தின் செயல் அதிகாரி மாணிக்கம், துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.