/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 75 நாளுக்கு பின் பாதுகாப்பு அறைக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயணம் 75 நாளுக்கு பின் பாதுகாப்பு அறைக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயணம்
75 நாளுக்கு பின் பாதுகாப்பு அறைக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயணம்
75 நாளுக்கு பின் பாதுகாப்பு அறைக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயணம்
75 நாளுக்கு பின் பாதுகாப்பு அறைக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயணம்
ADDED : ஜூன் 05, 2024 09:07 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கோவையில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டன.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தேர்தலுக்காக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கடந்த மார்ச் 21ம் தேதி கொண்டு வரப்பட்டு, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் வைக்கப்பட்டன.
அங்கு இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'பேலட் பேப்பர்' பொருத்தப்பட்டு, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன.
கடந்த, ஏப்., 19ம் தேதி தேர்தல் முடிந்ததும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்குள்ள பாதுகாப்பு அறையில், ஒரு மாதத்துக்கு மேலாக இருப்பு வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஓட்டு எண்ணப்பட்டது. இதையடுத்து, ஓட்டு பெட்டிகளை மீண்டும் கோவையில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றன.
தேர்தலுக்காக, 75 நாட்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பெட்டிகள், நேற்றுமுன்தினம் இரவு கோவை இருப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, தொண்டாமுத்துார் ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோவைக்கு அனுப்பப்பட்டன.
அதேபோன்று, மடத்துக்குளம், உடுமலை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.