/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டோரத்தில் செயல்படும் மீன் கடைகளால் பாதிப்பு ரோட்டோரத்தில் செயல்படும் மீன் கடைகளால் பாதிப்பு
ரோட்டோரத்தில் செயல்படும் மீன் கடைகளால் பாதிப்பு
ரோட்டோரத்தில் செயல்படும் மீன் கடைகளால் பாதிப்பு
ரோட்டோரத்தில் செயல்படும் மீன் கடைகளால் பாதிப்பு
ADDED : ஜூலை 05, 2024 02:10 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, தேர்நிலையம் மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில், மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய, 4 மாநிலங்களில் இருந்து, கடல் மீன், விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
அந்த வகையில், இறால், வஞ்சிரம், அயிலை, சங்கரா, பாரை, நண்டு உள்ளிட்ட கடல் மீன் ரகங்கள் விற்பனைக்கு தருவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு சிலர் அனுமதியின்றி திறந்தவெளியில் மீன் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். சாலையோரம் கடைகள் அமைக்கப்படுவதால், வாகனங்களில் செல்வோர் நிறுத்தி மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில், சாலையோரம் மீன் கடைகள் விரிக்கப்படுகின்றன. மீன் மார்க்கெட்டை பொறுத்தமட்டில், விற்பனை முடிந்த பிறகு அந்த இடம் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால், திறந்தவெளியில் மீன் விற்பனை முடிந்தால், அதன் கழிவுகள், அருகில் இருக்கும் நீர்நிலைகளில் கொட்டி விடுகின்றனர். இதனால், சுகாதாரம் பாதிக்கிறது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ரோட்டோரம் மீன் விற்பனை செய்வதைத் தடை செய்து அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்,' என்றனர்.