Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொடிவகை காய்கறிகளில் மேலாண்மை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

கொடிவகை காய்கறிகளில் மேலாண்மை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

கொடிவகை காய்கறிகளில் மேலாண்மை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

கொடிவகை காய்கறிகளில் மேலாண்மை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

ADDED : ஜூன் 03, 2024 12:24 AM


Google News
ஆனைமலை;கொடி வகை காய்கறிகளில், மேலாண்மையை கடைப்பிடித்து மகசூல் அதிகரிப்பது குறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியிருப்பதாவது:

ஆனைமலை பகுதியில், சுரைக்காய், புடலை, பீர்க்கன் மற்றும் பாகற்காய் கொடி வகையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நல்ல வடிகால் வசதியுள்ள வெப்பநிலை, 25 - 30 செல்சியஸ் வரையிலான தட்ப வெப்பநிலைகளில் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகளவில் உண்டாகி மகசூல் அதிகரிக்கின்றது.

வெப்பநிலை, 35 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாகும் போது, ஆண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாகி மகசூல் குறைகிறது.

தேர்வு செய்யப்பட்ட விதைகளை, அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியை விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்பு அந்த விதைகளை நேரடியாக வயலில் நடவு செய்யலாம் அல்லது பாலித்தீன் பைகளில் நட்டு, நாற்று முளைத்த பின்பு வயலில் நட வேண்டும்.

குழித்தட்டு முறையிலும், நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யலாம். உற்பத்தி செய்த, 28 - 30 நாள் நாற்றுக்களை ஒரு ெஹக்டேருக்கு, 25 டன்கள் நன்கு மக்கிய தொழு உரம், 470 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பாஸ்போ பேக்டீரியா, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு வயலில் நடவு செய்ய வேண்டும்.

பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, எத்ரல் என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியினை, 2.5 மி.லி., 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து முதல் இரண்டு இலைகள் உருவாகிய பின் ஒரு முறையும்; பின்னர் வாரம் ஒரு முறை என்ற இடைவெளியில், மூன்று முறை தெளிக்க வேண்டும்.

கரையும் உரப்பாசனம் முறையானது, நாற்று நடவு செய்த ஒரு வாரத்துக்கு பின், மூன்று நாட்கள் இடைவெளியில், கடைசி அறுவடை வரை உரங்கள் கொடுக்க வேண்டும்.

செடிகளை மாற்றி நட்டது முதல், நன்கு வளரும் வரையும், பூக்கும் காலம் முதல் காய் பிடிக்கும் வரை தோட்டக்கலைத்துறை வழிகாட்டுதலின் படி, நீரில் கரையும் உரங்கள் அளிக்க வேண்டும்.

மேலும், பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, தோட்டக்கலைத்துறை பரிந்துரை செய்யும் மருந்துகளை பயன்படுத்தலாம்.

விதைத்த, 15 வது நாளிலும், 30வது நாளிலும் களை கொத்து கொண்டு, களை எடுக்க வேண்டும். நடவு செய்த, 60 - 65ம் நாளில் இருந்து அறுவடை செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை என்ற அளவில் காய்கள் அறுவைடை செய்ய வேண்டும்.

மேலும், பயிர்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த, உயிரியல் பூஞ்சான கொல்லிகளான டிரைக்கோடெர்மா, சூடோமோனஸ் போன்றவை பயன்படுத்தலாம்.

நோய் தாக்கிய பயிர்களை கட்டுப்படுத்த, காப்பர் ஆக்ஸிடு குளோரைடு, சினப், மான்கோசெப் மற்றும் கார்பன்டைசிம் போன்றவை பயன்படுத்த, தோட்டக்கலைத்துறை அறிவுரை பெற்று பயன்படுத்தி மகசூலலை பெறலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us