Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விளம்பர விருப்பம் அதிநவீன விரைவுரை பிடிப்பு தளம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்

விளம்பர விருப்பம் அதிநவீன விரைவுரை பிடிப்பு தளம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்

விளம்பர விருப்பம் அதிநவீன விரைவுரை பிடிப்பு தளம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்

விளம்பர விருப்பம் அதிநவீன விரைவுரை பிடிப்பு தளம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்

ADDED : ஜூலை 09, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
கோவை;துடியலுார், வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், அதிநவீன விரிவுரை பிடிப்பு தளத்தின் துவக்க விழா நடந்தது.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ''அதிநவீன விரிவுரைப் பிடிப்பு தளத்தின் முதன்மை நோக்கம், ஆசிரியர்களின் விரிவுரைகளைப் பதிவு செய்து, அவர்களின் கற்பித்தல் செயல்முறையை பின்னுாட்டத்துடன் மேம்படுத்துவதாகும். ஆன்லைன் மற்றும் அவுட்ரீச் நிகழ்ச்சிகளின் பதிவுகளை எளிதாக்குவதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும்,'' என்றார்.

கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் தொழில் முனைவோர் மாதம்பட்டி ரங்கராஜ், டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மராத்தானை வென்ற நவுஷீன் பானு சந்த், லவ்லி டிரெயில்சின் நிறுவனர் இஷாக் முகமது அப்பாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவிற்கு, கல்வித்துறை இயக்குனர் அலமேலு, முதல்வர் ( பொறுப்பு) கருப்புசாமி மற்றும் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us