/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தரமான கட்டுமானத்துடன் 'அத்யா' அடுக்குமாடி வீடுகள்தரமான கட்டுமானத்துடன் 'அத்யா' அடுக்குமாடி வீடுகள்
தரமான கட்டுமானத்துடன் 'அத்யா' அடுக்குமாடி வீடுகள்
தரமான கட்டுமானத்துடன் 'அத்யா' அடுக்குமாடி வீடுகள்
தரமான கட்டுமானத்துடன் 'அத்யா' அடுக்குமாடி வீடுகள்
ADDED : ஜூலை 07, 2024 10:15 PM

கோவை;கோவை, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி ரோட்டில், 'அத்யா' அபார்ட்மென்ட் துவக்க விழா நேற்று நடந்தது. பூர்ணயா டெவலப்பர்ஸ் நிறுவனம் கட்டுமானத்தை மேற்கொள்கிறது.
நிறுவனத்தின் துணை தலைவர் காந்தி கிருஷ்ணன் கூறியதாவது:
இந்த அபார்ட்மென்டில் 200 வீடுகள் அமையவுள்ளன. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் ஒன்று முதல் மூன்று படுக்கையறை வரை உள்ள வீடுகள், 18.3 லட்சம் ரூபாய் முதல், 70 லட்ச ரூபாய் வரை மதிப்பில் கட்டப்படுகின்றன.
சின்னவேடம்பட்டி மெயின் ரோட்டில், 1.25 ஏக்கரில் அமைக்கப்படும் இந்த குடியிருப்பில், ஒரு நவீன அரங்கு, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகள் உண்டு. கட்டுமானத்திற்கு அதிநவீன, தரம் வாய்ந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவுகள் இருக்காது. கழிவு நீரை மேலாண்மை செய்ய, ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.
புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக முதல், 25 வாடிக்கையாளர்களுக்கு சதுரடி 4999 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. 85 சதவீதம் வரை வங்கி கடன் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
துவக்க நிகழ்ச்சியில், பூர்ணயா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் கோபாலகிருஷ்ணன், அஸ்வின் ராம் பங்கேற்றனர்.