Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மரங்களின் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை ; நீடித்த வளர்ச்சிக்கு உதவும் உயிர் உரங்கள்

மரங்களின் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை ; நீடித்த வளர்ச்சிக்கு உதவும் உயிர் உரங்கள்

மரங்களின் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை ; நீடித்த வளர்ச்சிக்கு உதவும் உயிர் உரங்கள்

மரங்களின் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை ; நீடித்த வளர்ச்சிக்கு உதவும் உயிர் உரங்கள்

ADDED : ஜூன் 14, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
கோவை : மரங்களின் நீடித்த வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக, கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நிறுவனத்தின், வனப்பாதுகாப்பு துறை விஞ்ஞானி கார்த்திகேயன் கூறியதாவது:பல்வேறு இடங்களில், மரங்களின் வளத்தை அதிகப்படுத்துவது எங்கள் பணி. சுரங்கம் உட்பட அதிகளவு மண் தோண்டும் பகுதிகளில், அடிமண் அதிகளவில் ஓரிடத்தில் கொட்டப்படும். இந்த மண்ணையும், இதனருகில் உள்ள மேல் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளை சேகரித்து, அதை ஆய்வகத்தில் வைத்து பெருக்கி, சேகரிக்கப்பட்ட மண்ணுடன் சேர்க்கும் போது, மண்ணுக்கு தேவையான பாஸ்பரஸ், நைட்ரஜன், பொட்டாசியம் ஆகிய சத்துக்களை அது கிரகித்துக் கொள்ளும்.

பின் இதில் செடிகள் பதித்து வளர்த்து, சுரங்கம் தோண்டிய பகுதியில் வைத்து, மரங்களின் வளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவையில் மதுக்கரை, சேலம், நாமக்கல், ஏற்காடு போன்ற பகுதிகளில், இம்முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சவுக்கு மரங்களில், வேர் அழுகல், வாடல், பட்டைப் புண் ஆகிய பாதிப்புகள் வருவதுண்டு. இதற்காக, சவுக்கு மரத்தின் வேர் முடிச்சில் இருக்கும் 'பிராங்கியா' என்ற நுண்ணயிரை எடுத்து வந்து, ஆய்வகத்தில் பெருக்கி, ஊட்டச்சத்துக்கு மிக்க உயிர் உரமாக மாற்றி, புதிய நாற்றுகள், உறுதியாக வளர்வதற்கு ஏற்ப, இந்த உயிர் உரம் பயன்படுத்தப்படும். 'மோனோ - 20' என்ற உயிர் உரம், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு, வேர் அழுகல் உட்பட நோய்களால் பாதிக்கப்படும் சவுக்கு மரத்துக்கு செலுத்தினால், பாதிப்பில் இருந்து மரம், இயல்பு நிலைக்கு திரும்பும்.

தவிர, அனைத்து மரங்களுக்கான வேர் அழுகல் பாதிப்புக்கு, 'ட்ரைகோ-டெர்மா' என்ற உயிர் உரம் பயன்படுத்தலாம். நைட்ரஜனை நிலைப்படுத்தி எல்லா மரங்கள், செடிகளுக்கு வழங்கும் வகையிலான 'அசோஸ்பைரில்லம்', மண்ணில் இருக்கும் பாஸ்பரஸ் சத்தை எளிதில் கிரகிக்கும் 'பாஸ்போ பாக்டீரியா', பொட்டாசியம் சத்துக்களை திரட்டும், 'பொட்டாசியம் திரட்டி', மண்ணில் பாஸ்பரஸ் சத்து குறைவாக இருக்கும் நிலையில், அவற்றை நிவர்த்தி செய்ய 'வேர் பூஞ்சை' ஆகிய உயிர் உரங்கள், இங்கு தயாரித்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us