/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவர்கள் வாகனம் இயக்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை சிறுவர்கள் வாகனம் இயக்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை
சிறுவர்கள் வாகனம் இயக்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை
சிறுவர்கள் வாகனம் இயக்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை
சிறுவர்கள் வாகனம் இயக்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை
ADDED : ஜூலை 19, 2024 12:07 AM
கோவை:''18 வயது பூர்த்தியாகாதவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்,'' என, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'நான்சி அன்டோல்டு ஸ்டோரி' எனும் குறும்படம் வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. லலித் ஜூட் என்பவர் இயக்கிய போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இக்குறும்படத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
'நான்சி' குறும்படம் பொது மக்களுக்கு அழுத்தமான செய்தியை வெளிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் காவல் துறை வலைதளத்தில் வெளியிடப்படும். பொது மக்கள் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
மேலும், 18 வயது பூர்த்தியாகாதவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது பூர்த்தியானாலும் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.