Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐயப்பன் கோவிலில் ஆடி உற்சவம்

ஐயப்பன் கோவிலில் ஆடி உற்சவம்

ஐயப்பன் கோவிலில் ஆடி உற்சவம்

ஐயப்பன் கோவிலில் ஆடி உற்சவம்

ADDED : ஜூலை 30, 2024 11:13 PM


Google News
கோவை;ராம் நகர் ஐயப்பன் கோவிலில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு, நாளை முதல் வரும் 16ம் தேதி தேதி வரை தினமும் மாலை, ஆன்மிக தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது.

நாளை முதல் வரும் 7ம் தேதி வரை, ஆங்கரை ரங்சாமி தீட்சிதரின் வால்மீகி ராமாயணம்; வரும் 8ம் தேதி மாலை 5:30 மணிக்கு மைதிலி ரங்கநாதன் குழுவினரின் நாராயணீயம்; வரும் 9ம் தேதி, மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை தேவி மகாத்மியம், இரவு 7:00 மணிக்கு, ருத்ரன் அருண்குமாரின் வந்தாள் சென்றாள் - கோதை; வரும் 10ம் தேதி, இரவு 7:00 மணி முதல் சபர்பன் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் நாம சங்கீர்த்தனம்; வரும் 11ம் தேதி இரவு 7:00 மணி முதல் சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி மாணவர்களின் நாம சங்கீர்த்தனம்; வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை கிருஷ்ண ஜகன்னாதனின் அபிராமி அந்தாதி; வரும் 15ம் தேதி பூர்ணிமா, ஸ்ரீகாந்த்தின் பிக்ஷு கீதா ஹரிகதா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்று இறையருள் பெற, கோவில் நிர்வாகக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us