/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆதார் திருத்த முகாம் நாளை நடக்கிறது ஆதார் திருத்த முகாம் நாளை நடக்கிறது
ஆதார் திருத்த முகாம் நாளை நடக்கிறது
ஆதார் திருத்த முகாம் நாளை நடக்கிறது
ஆதார் திருத்த முகாம் நாளை நடக்கிறது
ADDED : ஜூன் 02, 2024 11:31 PM
அன்னுார்:அன்னுார் நல்லிசெட்டிபாளையம் கிளை அஞ்சலகத்தில் நாளை (4ம் தேதி)ஆதார் திருத்த முகாம் நடைபெறுகிறது.
அன்னுார் அருகே, நல்லிசெட்டிபாளையத்தில் கிளை அஞ்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நாளை (4ம் தேதி) ஆதார் திருத்த முகாம் நடைபெறுகிறது.
இதில் ஆதார் சம்பந்தமான முகவரி திருத்தம் செய்தல், மொபைல் எண்கள் இணைத்தல், திருத்தம் செய்தல் பின்கோடு எண் மாற்றுதல், புதிதாக ஆதார் அட்டை எடுத்தல் ஆகிய அனைத்து திருத்தங்களும், காலை, 9:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை கிளை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி, ஆதார் திருத்தம் செய்வதற்கும், புதிதாக ஆதார் எடுப்பதற்கும், தேவையான ஆவணங்களை கொண்டு வரும்படி, நல்லிசெட்டிபாளையம் கிளை அஞ்சல் அதிகாரி இந்து மாலினி அறிவித்துள்ளார்.