/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவு 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவு
2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவு
2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவு
2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பதிவு
ADDED : ஜூன் 27, 2024 10:14 PM
கோவை : மத்திய, மாநில அரசுகளின் அனைத்து விதமான கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் எண் மிகவும் அவசியமாக உள்ளது.
பள்ளி குழந்தைகள் எளிதில் ஆதார் சேவை பெறும் வகையில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்துடனும் ஆதார் சேவைகள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்து தரப்பட்டுள்ளது.
'தொடர்ந்து, பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது' என்றார்.