ADDED : ஜூன் 28, 2024 11:49 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்தில் கூடுதல் ஆதார் சேவை மையம் துவங்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தங்களின் ஆதார் திருத்தம் செய்ய கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையம் மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் செயல்படும் மையத்துக்கு மட்டுமே செல்கின்றனர்.
இந்த இரண்டு இடங்களில் மட்டும் புதிய ஆதார் பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் போன்றவைகள் செய்து தரப்படுகிறது. இங்கு, தினமும் தலா 20 முதல் 25 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீசில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையத்திலும், பணியாளர் இல்லாததால் இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு மக்கள் ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ள முடியாமல் தினம் தோறும் வந்து செல்கின்றனர்.
எனவே, மக்கள் நலன் கருதி அந்தந்த ஊராட்சிகளில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அல்லது இ - சேவை மையங்களில் ஆதார் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.