/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 25, 2024 12:23 AM

ஆனைமலை : ஆனைமலை அருகே, ரோட்டில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இந்நிலையில், நேற்று சேத்துமடை அருகே புங்கனப்பள்ளம் பகுதியில், வாகை மரம் ரோட்டில் சரிந்து விழுந்தது.
அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மரத்தை அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.