Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தாயை தொழில்முனைவோர் ஆக மாற்றிய பச்சிளங்குழந்தை!

தாயை தொழில்முனைவோர் ஆக மாற்றிய பச்சிளங்குழந்தை!

தாயை தொழில்முனைவோர் ஆக மாற்றிய பச்சிளங்குழந்தை!

தாயை தொழில்முனைவோர் ஆக மாற்றிய பச்சிளங்குழந்தை!

ADDED : ஜூலை 20, 2024 11:33 PM


Google News
''என் மகனுக்காக, பாய்சன் இல்லாத விளையாட்டு பொருள் வாங்க, பெரிதும் மெனக்கெட்டேன். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், உருவாக்கிய மர பொம்மையே, இப்போது என் பிசினஸ் ஆக மாறிவிட்டது,'' என்கிறார் கோவை, வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த நிக்கிதா.

அவர் நம்மிடம் பகிர்ந்தவை:

என் மகன் நிக்கித்ரன் பிறந்து 11 மாதங்களே ஆன நிலையில், விளையாட பொம்மை வாங்கலாம் என ஆன்லைனில் தேடினேன். பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு மாற்றாக வேறு மெட்டீரியல் தேடிய போது, மரப்பொம்மைகள் இருந்தன.

ஆனால் அவற்றில், பெயின்ட் வாசம் இருந்ததோடு, குழந்தை வாயில் வைத்தால், உடல்நலன் பாதிக்கப்படலாம் என்று தோன்றியது.

எனவே, உடையாமல் இருப்பதோடு, தீங்கு விளைவிக்காத மர வகை பொம்மை தேடிய போது, 'யுரோப்பியன் பிர்ச் வுட்' மற்றும் 'இண்டியன் ரோஸ் வுட்' ஆகியவை கிடைத்தன.

இதை இறக்குமதி செய்து, பொம்மை தயாரிக்க முடிவெடுத்தேன். 'நான்டாக்ஸிக் சார்க் பெயின்ட்' மூலமாக வண்ணம் கொடுத்தேன். இது, குழந்தைகளுக்கு எவ்வித கெடுதலும் ஏற்படுத்தாது.

இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், வீடு, அலுவலகத்திற்கான அலங்கார பொருட்கள், கிப்ட் பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தேன்.

நல்ல வரவேற்பு இருக்கிறது. picky-arts என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னுடைய புதிய படைப்புகளை போட்டோ எடுத்து, உள்ளீடு செய்வேன். வீட்டில் இருந்தபடியே, ஓய்வு நேரத்தில், மனதுக்கு பிடித்த விஷயத்தை செய்வதால், வருமானத்தோடு மனநிம்மதியும் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us