/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதிகாலையில் வீட்டின் பூட்டுடைக்கும் திருடன் அதிகாலையில் வீட்டின் பூட்டுடைக்கும் திருடன்
அதிகாலையில் வீட்டின் பூட்டுடைக்கும் திருடன்
அதிகாலையில் வீட்டின் பூட்டுடைக்கும் திருடன்
அதிகாலையில் வீட்டின் பூட்டுடைக்கும் திருடன்
ADDED : ஜூலை 15, 2024 12:39 AM
கோவை;அதிகாலையில், வீட்டின் பூட்டை உளி, சுத்தியல் வைத்து உடைத்து திருட முயன்ற மர்ம நபரால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ஷோபா நகரில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இங்கு நேற்று அதிகாலை, 2:17 மணிக்கு மர்ம நபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தார்.
அதன்பின் வீட்டின் கதவு பூட்டை உளி, சுத்தியல் ஆகியவற்றால் உடைத்து, ஸ்குரு டிரைவர் வாயிலாக திறக்க முயன்றார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பெரியவர், கதவை சாவி வாயிலாக உள்ளே இருந்தபடி திறக்க முயன்றார்.
ஆனால், திருடன் பூட்டை உடைத்ததால், திறக்க முடியவில்லை. வீட்டின் உள்பகுதியில், விளக்கு ஒளிர்ந்ததால், திருடன் அனைத்து பொருட்களையும் அப்படியே போட்டு விட்டு தப்பினார்.
வீட்டில் இருந்தவர்கள், அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கதவை திறந்து வெளியில் வந்தனர். திருடனின் செயல்களை கண்காணிப்பு கேமரா வாயிலாக பார்த்த பீளமேடு போலீசார், விசாரிக்கின்றனர்.