/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பராமரிப்பின்றி பாழாகும் நாற்றாங்கால் பண்ணை பராமரிப்பின்றி பாழாகும் நாற்றாங்கால் பண்ணை
பராமரிப்பின்றி பாழாகும் நாற்றாங்கால் பண்ணை
பராமரிப்பின்றி பாழாகும் நாற்றாங்கால் பண்ணை
பராமரிப்பின்றி பாழாகும் நாற்றாங்கால் பண்ணை
ADDED : ஜூன் 25, 2024 02:01 AM

மேட்டுப்பாளையம்;கெம்மாரம்பாளையம் நாற்றங்கால் பண்ணை பராமரிப்பின்றி பாழாகிறது.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம், கெம்மாரம்பாளையம் ஊராட்சியில், பசுமை ஏற்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் செலவில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பூவரசு, சவுக்கு, சில்வர் ஓக், சிறு தேக்கு உள்ளிட்ட பல செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள், மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு நிலப்பகுதிகளில் நடவு செய்யப்பட்டது.
இப்பண்ணையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 40 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டது. ஒரு மரக்கன்று ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது இந்த நாற்றங்கால் பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. தண்ணீர் ஊற்ற கூட ஆட்கள் இல்லாததால் ஏற்கனவே உற்பத்தி செய்த மரக்கன்றுகளும் கருகி போனது. கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3 லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 15 பணியாளர்களுக்கு இங்கு தினமும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது நிதி பற்றாக்குறை, ஆட்கள் குறைவு என்பதால் நாற்றங்கால் பண்ணை பராமரிப்பு இன்றி உள்ளது.
இதுகுறித்து கெம்மாரம்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா கூறுகையில், 'நாற்றாங்கால் பண்ணைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஊராட்சி தூய்மைப் பணியாளர்களை கொண்டு தற்போது பராமரித்து வருகிறோம். விரைவில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும்' என்றார்.