ADDED : ஜூலை 07, 2024 12:49 AM
கோவை:மதுக்கரை பிள்ளையார்புரத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்க வருமாறு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, அழைப்பு விடுத்துள்ளது.
மதுக்கரை, பிள்ளையார்புரத்தில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதியில் கடந்த ஜூன் 1ம் தேதி, 5,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பசுமை வனம் உருவாக்கும் முயற்சியில் நடப்பட்ட இந்த மரக்கன்றுகளை, பராமரிக்கும் பணி இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7:00 முதல் 9:30 மணி வரை, பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள தன்னார்வலர்கள், செடிகளுக்கு நீர் ஊற்றுதல், களைகளை அகற்றுதல், மண்மேடு அமைத்தல், மரக்கன்றுகளின் வளர்ச்சியைக் கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபடலாம்.
தன்னார்வலர்கள் தண்ணீர் பாட்டிலுடன், தொப்பி, கையுறை அணிந்து வருவது நல்லது என, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, 80157 14790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.