/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தடுப்பு இல்லாத பாலம் விபத்து ஏற்படும் அபாயம் தடுப்பு இல்லாத பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
தடுப்பு இல்லாத பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
தடுப்பு இல்லாத பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
தடுப்பு இல்லாத பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜூன் 27, 2024 09:49 PM

உடுமலை : உடுமலை தளி ரோடு அரசு பெண்கள் பள்ளி அருகே, தரைமட்ட பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதால் விபத்துகள் அதிகரிக்கிறது.
உடுமலை தளிரோடு மேம்பாலம் அருகே, ரயில்வே நிலை ரோடு சந்திக்கும் பகுதியில் தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதியில், மேம்பாலத்தின் தடுப்பு உள்ளது.
மற்றொரு பகுதியில் முறையான தடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது. இவ்வழியாக பள்ளி செல்லும் மாணவியர், பணிக்கு செல்வோர் மற்றும் நாள்தோறும் நுாற்றுக்கணக்கில் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இரவு நேரங்களில் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை. ரோட்டின் விளைவில் சில நேரங்களில் அதிவேகமாக வந்து வாகன ஓட்டுநர்கள் திரும்புகின்றனர்.
பாலத்தில் தடுப்பு இல்லாததால், சில நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி பள்ளத்தில் விழுகின்றனர். பள்ளி மாணவியர் சைக்கிள்களில் வரும் போதும், இவ்வாறு கவனமில்லாமல் பள்ளத்தில் விழுகின்றனர்.
விபத்துகளை தடுக்க, பாலத்தின் ரோட்டோரத்தில் தடுப்பு அமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.