/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்ட விரோதமாக மது விற்பனை; 98 பேர் அதிரடி கைது சட்ட விரோதமாக மது விற்பனை; 98 பேர் அதிரடி கைது
சட்ட விரோதமாக மது விற்பனை; 98 பேர் அதிரடி கைது
சட்ட விரோதமாக மது விற்பனை; 98 பேர் அதிரடி கைது
சட்ட விரோதமாக மது விற்பனை; 98 பேர் அதிரடி கைது
ADDED : ஜூன் 21, 2024 12:51 AM
கோவை:கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பான சோதனையில், 40 தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியான விவகாரத்தை தொடர்ந்து,மாநிலம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில், 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் கூறியதாவது:
மாவட்டத்தில் நேற்று (நேற்று முன்தினம்) காலை முதல் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மது விற்றதாக, 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 1,092 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; தவிர,203 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மது கலப்படம் செய்யப்பட்டதா அல்லது 'டாஸ்மாக்' மதுக்கடையில் இருந்து வாங்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
அதேபோல், மாநகர போலீசார் உக்கடம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய சோதனையில், 20க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.