Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ்; கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை!

எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ்; கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை!

எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ்; கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை!

எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ்; கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை!

UPDATED : ஜூலை 21, 2024 04:17 AMADDED : ஜூலை 21, 2024 02:32 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவையில், கான்ட்ராக்ட் பணிகளை எடுத்துச் செய்தது தொடர்பான புகார் நிரூபிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை இன்ஜினியர்கள் கூண்டோடு அனைவரும் மாற்றப்பட்ட பின்னும், அந்த பணிகளுக்கு மறு டெண்டர் விடப்படவில்லை. ரோடு வேலைகளைச் செய்ய முடியாத கான்ட்ராக்டர்கள் அந்தப் பணியைச் செய்யாததால், ரோடுகள் அனைத்தும் குதறிக் கிடக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு சார்பில், ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரோடு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலான பணிகளை, துறையிலுள்ள இன்ஜினியர்களே யாராவது ஒரு சிறிய கான்ட்ராக்டர்கள் பெயரில் டெண்டர் எடுத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஐந்து சதவீதத் தொகையை மட்டும் கொடுத்துள்ளனர்.

Image 1296602


பணி நடந்தாலும், நடக்காவிட்டாலும் பில் போட்டு, கான்ட்ராக்டர்கள் பெயரில் தொகை சென்றதும், அதை அவர்கள் இன்ஜினியரிடம் கொடுத்து விடுவார்கள்.

ஏற்கனவே வாங்கிய ஐந்து சதவீதம் தவிர்த்து, ஆறு மாதங்கள் கழித்து, 'வித்ஹெல்டு' என்ற பெயரில் இரண்டரை சதவீதத் தொகை கிடைக்கும்.

ஆக மொத்தத்தில் எந்த வேலையும் செய்யாமலே, டெண்டர் தொகையில் ஏழரை சதவீதம் கிடைத்து விடும். இப்படித்தான் கோவையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, இன்ஜினியர்களே எடுத்துச் செய்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்து, கோயம்புத்துார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில், துறையின் செயலாளருக்கு புகார் சென்றது.

அதுபற்றி நமது நாளிதழில், 'கான்ட்ராக்டர்களாக மாறிய ஹைவேஸ் அதிகாரிகள்' என்ற தலைப்பில், ஜூன் 2 அன்று விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, அமைச்சர் வேலு உத்தரவின்பேரில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், கோவை கோட்டத்தில் இருந்த கோட்டப் பொறியாளர் உட்பட அனைத்து உதவி கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

ஆனால் முறைகேடு நடந்தது தெரிந்தும், அந்த 87 பணிகளுக்கும் மறு டெண்டர் விடப்படவில்லை. மாறாக, அதே ஒப்பந்தங்களில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போது இந்தப் பணிகளை எடுத்த இன்ஜினியர்கள் இல்லாத நிலையில், எந்த உபகரணமும், வசதியும் இல்லாத கான்ட்ராக்டர்கள் பெயர்களில்தான் ஒப்பந்தங்கள் உள்ளன. அவர்களில் பெரும்பாலான வர்கள், இந்தப் பணியை மேற்கொள்வதற்கான தளவாடங்கள், வாகனங்கள் எதுவுமே இல்லாத, பெயரளவிலான கான்ட்க்டர்கள் என்பதால், இந்தப் பணிகளைச் செய்ய முடியவில்லை. இதனால் நகருக்குள் உள்ள பெரும்பாலான ரோடுகள் மோசமாக உள்ளன

இதுகுறித்து கருத்துக் கேட்க, நெடுஞ்சாலைத்துறை கோவை சூப்பரிண்டென்ட் இன்ஜினியர் ரமேஷை தொடர்பு கொண்டபோது, வழக்கம் போல அவரிடம் பதில் பெறவே முடியவில்லை.

-நமது சிறப்பு நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us