/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கள் மற்றும் மது விற்பனை நெகமத்தில் 8 பேர் கைது கள் மற்றும் மது விற்பனை நெகமத்தில் 8 பேர் கைது
கள் மற்றும் மது விற்பனை நெகமத்தில் 8 பேர் கைது
கள் மற்றும் மது விற்பனை நெகமத்தில் 8 பேர் கைது
கள் மற்றும் மது விற்பனை நெகமத்தில் 8 பேர் கைது
ADDED : ஜூன் 23, 2024 11:34 PM
நெகமம்;நெகமம் சுற்று வட்டாரத்தில், கள் மற்றும் மது விற்பனை செய்தவர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.
நெகமம் சுற்று வட்டார பகுதியில், கள் மற்றும் மது விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடந்து வெள்ளாளபாளையத்தைச்சேர்ந்த காளிமுத்து, 50, மரம்பிடுங்கிகவுண்டனுாரைச்சேர்ந்த பொன்னுசாமி, 57, செங்குட்டைபாளையம் மகாலிங்கம், 40, தேவனாம்பாளையம் நாச்சிமுத்து, 40 மற்றும் மகேந்திரன், 40, சிறுகளந்தை சேனாதிபதி, 50, வெள்ளாளபாளையம் ஜெகன்நாதன், 40.
என ஏழு பேரிடம் இருந்து 26 லிட்டர் கள் மற்றும் செட்டியக்காபாளையத்தை சேர்ந்த வீரன், 70, என்பவரிடம் இருந்து, 6, மது பாட்டில் மற்றும் 1500 ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
மேலும், 8 நபர்களையும் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.