/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
ADDED : ஜூன் 18, 2024 10:56 PM
பொள்ளாச்சி;ஆனைமலை, கோட்டூர் ரோடு அய்யாமடை டாஸ்மாக் மதுபான கடை அருகே, பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, 50 கிலோ எடை கொண்ட, 12 மூட்டைகளில், 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த மலையாண்டிபட்டணத்தை சேர்ந்த கவின்குமார்,22, என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில், கோட்டூர், மலையாண்டிப்பட்டிணம் ஆகிய பகுதிகளில், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, செமணாம்பதியில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, வாகனத்தை ஓட்டி வந்த கவின்குமாரை போலீசார் கைது செய்து, 600 கிலோ ரேஷன் அரிசி, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.