/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சவுக்கு சங்கர், பெலிக்ஸுக்கு 55 பக்க குற்றப்பத்திரிகை நகல் சவுக்கு சங்கர், பெலிக்ஸுக்கு 55 பக்க குற்றப்பத்திரிகை நகல்
சவுக்கு சங்கர், பெலிக்ஸுக்கு 55 பக்க குற்றப்பத்திரிகை நகல்
சவுக்கு சங்கர், பெலிக்ஸுக்கு 55 பக்க குற்றப்பத்திரிகை நகல்
சவுக்கு சங்கர், பெலிக்ஸுக்கு 55 பக்க குற்றப்பத்திரிகை நகல்
ADDED : ஜூலை 18, 2024 11:20 PM
கோவை;பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த வழக்கில் கைதான, சவுக்கு சங்கர் மற்றும் யு டியூப் நிர்வாகிக்கு, 55 பக்கம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டன.
சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற 'யு டியூப்' சேனல் நடத்தி பிரபலமானவர். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற மற்றொரு 'யு யூடிப் ' சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, தரக்குறைவான அவதூறு கருத்துக்களை தெரிவித்தார்.
புகாரின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் மே, 4 ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது, கஞ்சா கடத்தல் உட்பட மாநிலம் ழுழுவதும் மேலும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்ட 'ரெட்பிக்ஸ்' யு டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். இருவரும் ஜாமின் கோரி பல முறை தாக்கல் செய்த மனுக்கள் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசார், இருவர் மீதும், கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்ற நகல் வழங்குவதற்காக இருவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர், கோவை ஜே.எம்:4, கோர்ட்டில், மாஜிஸ்திரேட் சரவணபாபு முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவருக்கும், 55 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டன.
இவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்பதற்காக, விசாரணை வரும், 30 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ......