/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வள்ளி கும்மி அரங்கேற்றம் 500 பேர் பங்கேற்பு வள்ளி கும்மி அரங்கேற்றம் 500 பேர் பங்கேற்பு
வள்ளி கும்மி அரங்கேற்றம் 500 பேர் பங்கேற்பு
வள்ளி கும்மி அரங்கேற்றம் 500 பேர் பங்கேற்பு
வள்ளி கும்மி அரங்கேற்றம் 500 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 30, 2024 01:24 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கரிய காளியம்மன் கோவிலில், 58வது வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி, ஆசிரியர் சிவகுமார் முன்னிலையில் நடந்தது. இதில், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், பேரூராட்சி தலைவர் கதிர்வேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், விநாயகர் வழிபாடும், தொடர்ந்து மரக்கன்று நடவும் செய்யப்பட்டது. முளைப்பாரி, கோமாதா வழிபாடு மற்றும் கொடியேற்றம் போன்ற நிகழ்சிகள் நடந்தது. அதன்பின், வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடனம் ஆடினர்.