/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடுக்குமாடியில் 400 சதுர அடி! மானியத்தில் வீடு பெற அழைப்பு அடுக்குமாடியில் 400 சதுர அடி! மானியத்தில் வீடு பெற அழைப்பு
அடுக்குமாடியில் 400 சதுர அடி! மானியத்தில் வீடு பெற அழைப்பு
அடுக்குமாடியில் 400 சதுர அடி! மானியத்தில் வீடு பெற அழைப்பு
அடுக்குமாடியில் 400 சதுர அடி! மானியத்தில் வீடு பெற அழைப்பு
ADDED : ஜூலை 10, 2024 01:35 AM

அன்னுார்;அடுக்குமாடி குடியிருப்பில், மானிய விலையில் 400 சதுர அடி வீடு பெற, பேரூராட்சி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தில், அல்லப்பாளையம், முல்லை நகரில், நலிவுற்ற, வீடற்ற, ஏழை, எளிய மக்களுக்காக, அனைவருக்கும் வீடு திட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இதில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறையுடன், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 400 சதுரடி பரப்பளவுள்ள குடியிருப்பு 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இங்கு 348 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பம் வழங்கும் முகாம், பேரூராட்சி சார்பில் வரும் 15ம் தேதி காலை 10:00 மணிக்கு, அன்னூர் யூ.ஜி.மஹாலில் நடக்கிறது.
பொதுமக்கள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வருமானச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரருக்கு இந்தியாவில் எங்கும் சொந்த வீடோ நிலமோ இருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அரசு சார்பில் வீடோ, நிலமோ பெற்றிருக்கக் கூடாது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு குடியிருப்புக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதி. எனவே, உரிய ஆவணங்களுடன் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்,' என பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் (பொறுப்பு) பெலிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.