/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 15, 2024 01:00 AM
பெ.நா.பாளையம்;சின்னதடாகம் வட்டாரத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், 221 கிலோ சட்டவிரோத புகையிலை பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
தடாகம் ரோடு, திருவள்ளுவர் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் பையுடன் இருந்த நபர்களை பிடித்து, தடாகம் போலீசார் நடத்திய விசாரணையில், சோமையனூர், திருவள்ளுவர் நகர் செந்தில்,47, துடியலூர் ஆனந்தகுமார், 51, என தெரிய வந்தது. இருவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர்கள் வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
அவர்களது வீட்டில், பதுக்கி வைத்திருந்த 221 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில், ஆனந்தகுமார் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.