/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முட்டை விற்பதாக ரூ.21 லட்சம் மோசடி முட்டை விற்பதாக ரூ.21 லட்சம் மோசடி
முட்டை விற்பதாக ரூ.21 லட்சம் மோசடி
முட்டை விற்பதாக ரூ.21 லட்சம் மோசடி
முட்டை விற்பதாக ரூ.21 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 02, 2024 11:24 PM
கோவை:சிவானந்தாபுரம், ஜனதாநகரை சேர்ந்த முனியம்மாள்,38, தனது கணவருடன் சேர்ந்து எண்ணெய் மற்றும் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். 2022ம் ஆண்டு செல்வபுரத்தில் மளிகை கடை நடத்தும் விருதுநகரை சேர்ந்த ராம்சேட்,36, என்பவர் முனியம்மாளை அணுகி, தான் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மொத்த விலையில், முட்டை வாங்கி விற்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 2023ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி முதல் வியாபாரம் தொடர்பாக முனியாம்மாளிடம் இருந்து, ராம்சேட் ரூ.15 லட்சம் பெற்றுள்ளார்.
தனது நண்பரான ஹனிஸ் ரகுமானிடம் இருந்தும் ரூ.6 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், இதுவரை பணத்தை திரும்ப தரவில்லை. முனியம்மாள் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து ராம்சேட்டை கைது செய்தனர்.