/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை
வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை
வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை
வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை
ADDED : ஆக 06, 2024 11:39 PM
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே குட்டையூர் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜூ, 47, டிரைவர். இவரது மனைவி அங்கம்மாள், 43, டெய்லர். இவர்கள் குடுபம்பத்துடன் கடந்த 2ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சென்றனர். நேற்று காலை வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 17 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள், கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.