/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.62 கோடிக்கு விற்பனை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.62 கோடிக்கு விற்பனை
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.62 கோடிக்கு விற்பனை
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.62 கோடிக்கு விற்பனை
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.62 கோடிக்கு விற்பனை
ADDED : ஜூன் 03, 2024 11:41 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி உழவர் சந்தையில், கடந்த மாதம், 1.62 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவ்வப்போது காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும்; விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் ஆர்வமாக வாங்குகின்றனர். கடந்த மாதம், ஒரு கோடியே, 62 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:
உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 5 லட்சத்து, 22 ஆயிரத்து, 598 ரூபாய் மதிப்புள்ள, 14,222 கிலோ காய்கறிகள் வந்தன. தினமும் சராசரியாக, 60 விவசாயிகளும், 2,844 நுகர்வோர்களும் வந்தனர்.
கடந்த மாதம், மொத்தம், 440.9 மெட்ரிக் டன் காய்கறி வரத்து காணப்பட்டது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, ஒரு கோடியே, 62 லட்சத்து, 555 ரூபாயாகும். மொத்தம், 1,870 விவசாயிகள்; 88 ஆயிரத்து, 180 நுகர்வோர்கள் உழவர் சந்தைக்கு வந்துள்ளனர்.
இவ்வாறு, கூறினர்.