/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செஸ் போட்டியில் 148 பேர் பங்கேற்பு செஸ் போட்டியில் 148 பேர் பங்கேற்பு
செஸ் போட்டியில் 148 பேர் பங்கேற்பு
செஸ் போட்டியில் 148 பேர் பங்கேற்பு
செஸ் போட்டியில் 148 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 07, 2024 09:01 PM
கோவை;மாவட்ட அளவிலான முதல் மாதாந்திர பயிற்சி செஸ் போட்டியில், 148 பேர் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான முதல் மாதாந்திர பயிற்சி செஸ் போட்டி பூ மார்க்கெட்டில் உள்ள சன்மார்க்க சங்கத்தில் நடந்தது. இதில், 148 பேர் கலந்து கொண்டு, 6 ரவுண்டுகளாக விளையாடினர்.
இறுதியில் முதல், 12 இடங்களை ஆகாஷ், சர்வேஸ்வரன், தனசேகர், கிஷோர், சந்தோஷ், நிர்மல், ஈதன் ஜான்சன், விஜய் கிருஷ்ணா, மித்ரன் செந்தில்குமார், திவேஷ், ஹரிசரண், சசிகுமார் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற 12 பேருக்கும் சான்றிதழும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
இதை தவிர, 9,12,15 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் விளையாட்டு வீரர்கள், 30 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.