/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியில் 14 அணி வீரர்கள் களம் பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியில் 14 அணி வீரர்கள் களம்
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியில் 14 அணி வீரர்கள் களம்
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியில் 14 அணி வீரர்கள் களம்
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியில் 14 அணி வீரர்கள் களம்
ADDED : மார் 13, 2025 11:52 PM
கோவை; கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் மாணவர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர்.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ். மைதானத்தில் கடந்த, 6ம் தேதி முதல் நடந்துவருகிறது. 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியில், 14 அணிகள் விளையாடி வருகின்றன.
முதல் சுற்றில், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி அணி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மகரிஷி வித்யா மந்திர் அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுக்கு, 80 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய, ஜெயந்திர அணி, 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு, 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாம் சுற்றில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியும், டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் உயர்நிலைப் பள்ளி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணி, 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 219 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக வீரர்கள் சித்தார்த், 92 ரன்களும், பிரகுல், 75 ரன்களும் விளாசினர். அடுத்து விளையாடிய, ராமலிங்கம் செட்டியார் அணி, 25 ஓவர்களில், 9 விக்கெட்டுக்கு, 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.