/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவன 12வது பட்டமளிப்பு விழா ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவன 12வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவன 12வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவன 12வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவன 12வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 22, 2024 01:33 AM

கோவை;ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின், 12வது பட்டமளிப்பு விழா, ஈச்சனாரியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலையின் துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி, ''நவீன தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதில் மாணவர்கள் ஆர்வமாக இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
விழாவில் செவிலியர், மருந்தாளுனர், துணை மருத்துவ அறிவியல் மற்றும் பிசியோதெரபி பாடங்களில் தேர்ச்சி பெற்ற 270 மாணவர்களுக்கு, விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மற்றும் கல்வி குழுமங்களின் இயக்குனர்கள் டாக்டர் குந்தவிதேவி, டாக்டர் பாலமுருகன் செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள் உமாதேவி, சுசரிதா மற்றும் பேச்சாளர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.