/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்று சம்பவங்களில் 12.5 சவரன் நகை 'அபேஸ்' மூன்று சம்பவங்களில் 12.5 சவரன் நகை 'அபேஸ்'
மூன்று சம்பவங்களில் 12.5 சவரன் நகை 'அபேஸ்'
மூன்று சம்பவங்களில் 12.5 சவரன் நகை 'அபேஸ்'
மூன்று சம்பவங்களில் 12.5 சவரன் நகை 'அபேஸ்'
ADDED : ஜூன் 22, 2024 11:50 PM
கோவை;மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த மூன்று சம்பவங்களில், 12.5 சவரன் தங்க நகை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
சிங்காநல்லுார், வசந்தா மில்ஸ் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கார்த்திக். இவரும், இவரது மனைவியும் கடந்த, 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டின் கதவை பூட்டி வேலைக்கு சென்றுவிட்டனர்.
மாலை, 6:45க்கு வீடு திரும்பியபோது கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க கொலுசு, மோதிரம், வளையல் என, 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கார்த்திக் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.
* கோவைப்புதுாரை சேர்ந்த ராமாத்தாள், 70, அவிநாசி ரோடு, அண்ணா சிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து, 110ஏ வழித்தட எண் கொண்ட அரசு பஸ்சில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் சென்றபோது ராமாத்தாள் கழுத்தில் இருந்த,2.5 சவரன் நகை காணாமல் போனது தெரிந்தது. புகாரின் பேரில், காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* பீளமேடு, அண்ணா நகரை சேர்ந்த விமலாதேவி,30, அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், இவரது கணவர் இல்லாத சமயத்தில் கடைக்கு டூ வீலரில் வந்த இருவரில் ஒருவர்,கடை முன் வாகனத்தில் நின்று கொள்ள, மற்றொருவர் விமலா தேவியிடம் ஜூஸ் கேட்டுள்ளார். ஜூஸ் எடுத்து தரும் சமயத்தில், அந்நபர் விமலா தேவியின் கழுத்தில் இருந்த, 5 சவரன் தாலி செயினை பறித்து, உடன் வந்தவருடன் தப்பினார். பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.