/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இறக்குமதி பருத்திக்கு 11 சதவீத வரி சலுகை அவசியம் ; தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் வலியுறுத்தல் இறக்குமதி பருத்திக்கு 11 சதவீத வரி சலுகை அவசியம் ; தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் வலியுறுத்தல்
இறக்குமதி பருத்திக்கு 11 சதவீத வரி சலுகை அவசியம் ; தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் வலியுறுத்தல்
இறக்குமதி பருத்திக்கு 11 சதவீத வரி சலுகை அவசியம் ; தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் வலியுறுத்தல்
இறக்குமதி பருத்திக்கு 11 சதவீத வரி சலுகை அவசியம் ; தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2024 04:45 AM
கோவை : ''ஜவுளித்துறை தேவையை சமாளிக்க, பருத்தி விளைச்சலை இரட்டிப்பாக்க வேண்டும். இறக்குமதி பருத்திக்கு, 11 சதவீத வரியை நீக்க வேண்டும்,'' என, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன் கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜவுளித்துறைக்கான மூலப்பொருட்கள் தரமானதாகவும், மலிவு விலையில் கிடைக்கவும் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ஜவுளித்துறை அடுத்த, 10 ஆண்டுகளுக்கு இன்னும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.
மிக முக்கியமாக, பருத்தி விளைச்சலை அதிகரிக்கச் செய்ய வேண்டும்; தரத்தை மேம்படுத்த வேண்டும். ஜவுளித்துறைக்கு தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யும்போது, தரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஜவுளித்துறை முடங்கியிருக்கிறது; இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலகளவில் ஜவுளி நுகர்வு முடங்கியுள்ளது. ஜவுளி சங்கிலித்தொடர் தொழில். மூலப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்தால், பிரச்னை வராது.
பருத்தி விளைச்சல்
நமது நாட்டில் ஓராண்டுக்கு, 323 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகிறது. 12 லட்சம் பேல் ஏற்றுமதியாகிறது. 20 முதல், 40 லட்சம் பேல் வரை இறக்குமதியாகும். நுகர்வு தேவை அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து தருவிக்கும்போது, இறக்குமதி செய்யும்போது, 11 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, விலை ஜாஸ்தியாகிறது.
இரண்டாவது பருவமான ஏப்., முதல் அக்டோபர் வரையிலான காலத்துக்கு பருத்தி கிடைக்காது; அச்சமயத்தில் பருத்தி இறக்குமதிக்கு, வரி விலக்கு கோரியுள்ளோம்.
இறக்குமதி வரி விதிப்பதால், கடந்தாண்டு, 12 முதல், 15 லட்சம் பேல் பருத்தியே தருவிக்கப்பட்டது. 50 லட்சம் பேல் தருவிக்கப்பட்டால், ஜவுளித்தொழில் இன்னும் முன்னேறிச் செல்லும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் பருத்தி விளைச்சலை நமது நாட்டிலேயே அதிகப்படுத்தினால், தொழில் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.