/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பைக் விபத்தில் வாலிபர் பலி ஓய்வு சி.ஆர்.பி.எப்., வீரர் கைது பைக் விபத்தில் வாலிபர் பலி ஓய்வு சி.ஆர்.பி.எப்., வீரர் கைது
பைக் விபத்தில் வாலிபர் பலி ஓய்வு சி.ஆர்.பி.எப்., வீரர் கைது
பைக் விபத்தில் வாலிபர் பலி ஓய்வு சி.ஆர்.பி.எப்., வீரர் கைது
பைக் விபத்தில் வாலிபர் பலி ஓய்வு சி.ஆர்.பி.எப்., வீரர் கைது
ADDED : மே 23, 2025 12:01 AM
ஆவடிதிருவள்ளூர் மாவட்டம், கல்பட்டு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 27. தனியார் நிறுவனத்தில், டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த 20ம் தேதி காலை, ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
ஆவடி, வீராபுரம் அருகே, பின்னால் வந்த மற்றொரு பைக், சரண்ராஜின் பைக்கை இடது புறமாக முந்தி சென்றபோது, லேசாக உரசியுள்ளது.
இதில் தடுமாறி விழுந்த சரண்ராஜ், இருசக்கர வாகனத்துடன் சாலையில் சிறிது துாரம் இழுத்து செல்லப்பட்டதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சரண்ராஜ் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்துக்கு காரணமான ஆவடி, வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எப்., வீரர் ராஜேந்திரன், 64, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.