ADDED : செப் 11, 2025 02:28 AM
தாம்பரம்:தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலியானார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கந்தன், 26. இவர், சேலையூர் அடுத்த அகரம் தென் பகுதியில் தங்கி, சிட்லப்பாக்கம் பகுதியில், வீடு கட்டுமான பணியில் நேற்று ஈடுபட்டார்.
வீடு அடித்தளம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற, மின் மோட்டாரை இயக்கியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். சிட்லப்பாக்கம் போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.