/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை மாத்திரை கஞ்சா விற்ற வாலிபர் கைது போதை மாத்திரை கஞ்சா விற்ற வாலிபர் கைது
போதை மாத்திரை கஞ்சா விற்ற வாலிபர் கைது
போதை மாத்திரை கஞ்சா விற்ற வாலிபர் கைது
போதை மாத்திரை கஞ்சா விற்ற வாலிபர் கைது
ADDED : ஜூன் 16, 2025 02:30 AM
அம்பத்துார், :அம்பத்துார் அருகே சூரப்பட்டு பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக, அம்பத்துார் போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த ஜியாஸ், 22, என்ற வாலிபரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா சிக்கியது. ஜியாஸை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
பின், அவரிடமிருந்து, ஒன்பது போதை மாத்திரைகள், ஊசி மற்றும் 1.55 லட்சம் ரூபாய், 'ராயல் என்பீல்டு' புல்லட் பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.