ADDED : செப் 02, 2025 02:04 AM
பூந்தமல்லி:பூந்தமல்லியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் ஏழு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது ரியாஸ், 20, என்பது தெரிந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், முகமது ரியாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.