/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 8 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது 8 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது
8 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது
8 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது
8 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது
ADDED : செப் 16, 2025 01:19 AM
சேலையூர்:சேலையூரில் 8 வயது சி றுமியிடம் அத்துமீறிய வாலிபரை, மக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் .
சேலையூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி, வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வந்த வாலிபர், சிறுமியை மாடிக்கு துாக்கி சென்றுள்ளார்.
இதை பார்த் த மற்றொரு சிறுமி, தன் உறவினரிடம் கூறியதை அடுத்து, அவர் மாடிக்கு சென்று பார்த்தபோது, போதை வாலிபர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. வாலிபரை பிடிக்க முயன்றபோது தப்பினார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் போதை வாலிபரை பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தார்.
விசார ணையில், கேரளாவைச் சேர்ந்த நிஷாயுதின், 30, என்பதும், கிழக்கு தாம்பரத்தில் தங்கி, ஸ்வீட் கடையில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. அவரை, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில், சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.